Friday, May 6, 2011

புலிகளை வெள்ளைக்கொகளுடன் ஒலிபெருக்கியில் உரத்துக்கத்தச் சொன்னேன்.

வன்னியில் புலிகளின் சாம்ராட்ஜம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தபோது படையினரிடம் சரணடைந்து தமது உயிர்களை காப்பற்றுவதை விட வேறு வழியில்ல என கருதிய புலிகள் தாம் சரணடையவிரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்கேமிடம் புலிகள் கெஞ்சியபோது, தற்போது காலம் கடந்துவிட்டது சரணடையவிரும்பின் வெள்ளைக்கொடிகளை உயர்த்தி பிடித்தவாறு ஒலிபெருக்கிகளை எடுத்துக்கொண்டு உரக்க கத்தியவாறு இராணுவத்தினர் உள்ள பிரதேசங்களை நோக்கிச் செல்லுங்கள் என தன்னிடம் பேசிய புலிகளின் தளபதிகளிடம் கூறினேன் என எரிக் சொல்கேம் நோர்வே நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தான் புலிகளிடம் பேசியபோது, நான் உங்களை 06 மாதத்திற்கு முதலே சரணடைய சொன்னேன். நீங்கள் நான் சொன்ன எதனையும் செவி மடுக்கவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை புலிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்திருந்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜ.நா அறிக்கை என்பது உலக நாடுகள் சர்வதேசத்து நியமங்களின் எல்லைவரை இலங்கை விடயத்தில் சென்றுள்ளதாக நான் கருதுகிறேன். இந்த ஜ.நா அறிக்கை மிகவும் பலமானது நான் முழுமையாக வாசிக்கவில்லை. புலிகளும் போர் குற்றம் புரிந்துள்ளார்கள். ஆனால் அவர்களில் அனைவரும் இறந்துவிட்டார்கள். ஆனால் தற்போது இலங்கை தரப்பு மீது குற்றச்சாட்டுகள் முன்னகர்ந்துள்ளது. எனவே இலங்கை அரசு இதனை விசாரிக்கவேண்டும் இல்லையேல் சர்வதேச சமூகம் வேறு வழிகளை நோக்கி சிந்திக்கும். நோர்வே இந்த இடத்தில் எதனையும் செய்துவிட முடியாது காரணம் நோர்வே ஒருபோதும் மத்திய பங்காளராக இலங்கை விடயத்தில் கலந்துகொண்டதில்லை. புலிகளின் தலைவர், நடேசன், புலிதேவன் ஆகியோர் இறுதி நாள் என்னுடன் தொடர்புகொண்டு சரணடைய போவதாகவும் எமது கருத்தையும் கேட்டார்கள். சம்பவ தினம் நான் பலருடன் இது தொடர்பாக கலந்துரையாடினேன். இலங்கை செஞ்சிலுவை சங்கமும் இந்த முயற்சியில் இடுபட்டது அனால் அடுத்தனால் அவர்கள் கொல்லபட்டதாக அறிந்தேன். எப்படி கொல்லபட்டார்கள் என்பது எமக்கு தெரியாது எனவும் தான் மேற்கொண்டு இங்கு கருத்துகூறுவது இலங்கை பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வரம் என்பதால் தவிர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com