மட்டகளப்பில் ஆயுதங்கள் மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூக்கர்கல் அம்புஸ்குடா பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர தெரிவித்தார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்தை சோதனையிட்ட போதே கிறனேட் 10, சயனைட் குப்பி 02, டெட்டனேட்டர் 30, ஜொனி பட் 01, ஜொனி பட் பீஸ் 02, ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
இப்பொருட்களின் ஜொனி பட்டில் "JONY SPECIAL - 95 MADE IN TAMIL EELAM" என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
இவை யுத்தகாலத்தில் விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர தெரிவித்தார்.
0 comments :
Post a Comment