Monday, May 23, 2011

2ஜி ஊழல்: கனிமொழி டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் முன் ஜாமீன் மறுக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

கனிமொழியை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் வெளிநாட்டில் பணியாற்றுவதால், தன்னுடைய மகனைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை காரணமாக மனிதநேய அடிப்படையில் ஜாமீன் வழங்க உத்தரவிடுமாறு அந்த மனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் இருப்பதால், ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கனிமொழி தனது மனுவில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே காரணத்தைச் சுட்டிக் காட்டி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், கூட்டுச் சதியாளராக சிபிஐ குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனர் கரீம் மொரானியின் முன் ஜாமீன் மனுவை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

டெல்லியில் கருணாநிதி...
இதனிடையே, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகள் கனிமொழியை சந்திக்க, திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை டெல்லி வந்தடைந்தார். அவருடன் மூத்த திமுக தலைவர் துரைமுருகனும் சென்றார்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வேறொரு விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தார்.

கருணாநிதியின் மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி ஏற்கெனவே டெல்லியில் இருக்கிறார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரான மகள் கனிமொழியைக் கண்டு, அவருடைய தாயார் ராஜாத்தி அம்மாள் கண்கலங்கி கதறியது குறிப்பிடத்தக்கது.


1 comments :

Nalliah May 28, 2011 at 6:29 AM  

கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்

செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில் எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா....

கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு 'இறந்தது என் மகனே அல்ல ' என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?

சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?, காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?; எம்ஜியாரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா?, எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?

முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனையில் 1968 ஜனவரி 01 ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?

ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி கருணாநிதி பரபரக்க வைத்தார். நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ…எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

நல்லையா தயாபரன்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com