லங்கா ஈ நிவுஸ் செய்தி ஆசிரியரை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு
லங்கா ஈ நிவுஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியரை கைது செய்யுமாறு பூகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் விசாரணையிலுள்ள வழக்கொன்று தொடர்பாக, உண்மைக்கு புறம்பான செய்தியொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே இவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஈ நிவுஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பூகொடை நீதமன்ற நீதவான் அரவிந்த பெரேரா பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள தொலைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 comments :
Post a Comment