Tuesday, April 12, 2011

நியமநேரம் பார்வையிடும் இணையத்தளம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டின் நியமநேரத்தை பார்வையிடும் இணையத்தளம் நேற்று ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நியம நேரத்தின் உத்தியோகப்பூர்வ இணைத்தளம் தற்போது இயங்கி வருவதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்த இணையத்தளம் இயங்காது காணப்பட்டது. இதனால் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நியம நேரத்தினை அறிய பொதுமக்கள் இன்று காலை முதல் முயற்சித்தனர். எனினும் அறிய முடியாதிருந்தது.

எவ்வாறாயினும், தற்போதிலிருந்து குறித்த இணையத்தளத்தினை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1945 ஆம் ஆண்டின் 35 ஆம் இல. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்திற்கிணங்க, தேசிய நேர மற்றும் மீடிறன் நியமங்கள், அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் தேசிய ஆய்வு கூடத்தினால் பேணப்படுகின்றன.

இலங்கையின் நியம நேரமானது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு (UTC) துன்னதாக 5 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களாகும்.

ஒருங்கிணைக்கப்படட சர்வதேச நேரம் என்பது (UTC) சர்வதேச நிறைகள் மற்றும் அளவீடுகள் பணியகத்தினால் தீர்மானிக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டின் 35 ஆம் இல. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் இவங்கையில் பேணப்படுகின்ற நேரத்தினையும் குறிக்கின்றது.

ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் (UTC) நேரத்திற்கான சட்ட அடிப்படையில் நிறைகள் மற்றும் அளவீடுகளின் சர்வதேச பணியகத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட சர்வதேச நேர அளவீடாகும்.இம்முறையானது கடிகார சுழற்சியினைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரத்தின் சர்வதேச நியமமானது பாரிசிலுள்ள நிறைகள் மற்றும் அளவீடுகள் (BIPM) பணயகத்தினால் உலகளாவிய ஆய்வுகூடங்களிலுள்ள அணுசாரந்த கடிகாரங்களிலுள்ள தரவுகளை ஒருங்கிணைக்கின்றது.

வானியல் அவதானங்களின் அடிப்படையிலான கிறீன்விச் நேரமானது நாளுக்கு நாள் புவியின் சுழற்சியில் ஏற்படுகின்ற மிகச்சிறிய வேறுபாடுகளுக்கு எடுக்கின்ற உண்மையான நேரத்தின் சராசரியாகும்.

கடிகாரங்கினால் எடுக்கப்படுகின்ற அளவீடானது மிகவும் சிறியதாகும். கிறீன்விச் நேரம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரம் ஆகியவற்றிற்கிடையிலான வித்தியாசமானது இரண்டாவதின் பின்னமாக அளவிடப்படுகின்றது. எவ்வாறாயினும் சில விஞ்ஞான விடயங்களிலுள்ள வேறுபாடானது மிகவும் முக்கியமானது.

உதாரணமாக, அதிகூடிய வேகத்தில் மாற்றப்படுகின்ற தரவு பரிமாற்றங்கள் மற்றும் உலக விடயங்கள் ஆகிய கணனி நிகழ்ச்சி திட்டங்களுடன் தொடர்புடையவை. இதுவும் செய்மதி உலகசார் நிலையியல் முறைமையினை (GPS) அடிப்படையாக கொண்டது.

பொது NTP (Network Time Protocol) Server இனூடான இணையத்தளத்தினூடான நேர பரிமாற்றதினை வழங்குவதற்கு MUSSD திட்டமிட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com