Thursday, April 21, 2011

அயல் கிரகத்தை சேர்ந்தவரின் இறந்த உடல் கண்டுபிடிப்பு.

பூமிக்கு வெளியே சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களிலும் இது தவிர சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களிலும். மனித இனம் போல வேறு உயிரினம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த அயல் கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்ததாகவும் அவர்களை பார்த்ததாகவும் ஐரோப்பியர்கள் அடிக்கடி சொல்வது உண்டு. ரஷியாவில் உள்ள சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உள்ள உறைபனி குப்பைகளில் ஒரு அயல் கிரகத்து உயிரினத்தின் இறந்த உடல் கிடந்ததாக அதை பார்த்ததாகவும் சமீபத்தில் 2 பேர் தெரிவித்தனர்.

அவர்கள் நடந்து சென்ற போது இதை பார்த்ததாக தெரிவித்தனர். இதை அவர்கள் போட்டோ எடுத்து இணையதளத்தில் இணைத்து விட்டனர்.

அழுகிய நிலையில் காணப்பட்ட அந்த உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. அதன் வாய் திறந்தபடி இருந்தது. அது 2 அடி உயரமே இருந்தது. அதன் வலது காலை காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் இருந்தன. மண்டை ஓடு போன்ற தலையில் ஒரு வாய் இருந்தது. இந்த அயல் கிரகவாசி விபத்தில் இறந்து போய் இருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர். இணையதளத்தில் இடம் பெற்ற அயல் கிரகவாசியின் உடலை ஒரு சில நாட்களில் 7 லட்சம் பேர் பார்த்தனர். ஆனால் இதை சிலர் அயல் கிரகவாசியின் உடல் என்பதை ஏற்றுக் கொள்ள வில்லை. இது ஒரு போலி வீடியோ என்றும் அயல்கிரகவாசி மாதிரியாக தயாரிக்கப்பட்ட ஒரு மாடல் என்றும் கூறி உள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com