புலிகள் ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக ஈரோபோல் அறிக்கை.
ஐரோப்பிய நாடுகள் யாவற்றையும் ஒன்றிணைத்த பொலிஸ் திணைக்களம் தனது விசேட அறிக்கை ஒன்றில் புலிகள் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. இத்திணைக்கள அறிக்கையில் பயங்கரவாத அமைப்புகள் தமது நடவடிக்கைகளை ஜரோப்பிய நாடுகளில் தீவிரபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பல்வேறு பயங்கரவாத அமைப்புகளான புலிகள் பிகேகே மற்றும் கொங்கா யெல் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் கூட்டாக இணைந்து இணையபாவனை, குழு அமைப்பு ரிதியான குற்ற செயல்கள், பயங்கரவாதம், நிதி பரிமாற்ற நடவடிக்கை, போதைவஸ்து பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத தேவைகளுக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிக்கபட்டுள்ளது.
இந்தவாரம் பயங்கரவாதம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜரோப்பிய நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான ஆய்வறிக்கையிலேயே இது மேலும் தெரிவிக்கபட்டுள்ளது. புலிகள் அமைப்பு குழுக்களாக இணைந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் ஆட்கடத்தல், போதைவஸ்து கடத்தல், சட்டரீதியற்ற பண பரிமாற்றம், போலி வங்கி அட்டை மோசடி போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் புலிகளின் பயங்கரவாத தேவைகளுக்கு நிதி சேகரிப்பதாகவும் புலிகள் தமது சட்டரிதியற்ற வரிவிதிப்புகளில் தமிழ் மக்களிடம் இருந்து நிதிகளை பெற்றுக்கொள்வதாகவும் ஜரோப்பிய பொலிஸ் அறிவித்துள்ளது.
மேலும் புலிகள் தமது பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக தமது வானொலிகள் தொலைக்காட்சிகளை பயன்படுத்தி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகுவம் தெரிவிக்கபட்டள்ளதுடன் 2010ம் ஆண்டு புலிகளின் நடவடிக்கைகளுடன் சம்மந்த பட்டவர்கள் பலர் பிறான்ஸ் ஜேர்'மனி கொலன் ஆகிய பிரதேசத்'தில் கைது செய்யபட்டமையும் குறிப்பிட்ட காட்டபட்டுள்ளது.
இதன் உத்தியோக பூர்வ அறிக்கையை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்
0 comments :
Post a Comment