ஜப்பான் தொழில்நுட்பத்தை மிச்சிய அந்நாட்டு மக்களின் நேர்மை.
ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி ஏற்படுத்திய இடிபாடுகளுக்கு இடையே கண்டெடுக்கப்படும் ரொக்கப் பணத்தை அதிகாரிகளிடம் அந்நாட்டு மக்கள் ஒப்படைத்து வருகின்றனர். நிலநடுக்கத்தாலும், அதைத் தொடர்ந்த சுனாமியாலும் பாதிக்கப்பட்ட ஜப்பானில் துயரத்துக்குக் குறைவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அது போல அங்குள்ள மக்களின் நேர்மைக்கும் குறைவில்லை.
இயற்கையின் சீற்றத்தால் இவாத்தே, மியாகி ஆகிய இரு வடகிழக்கு மாகாணங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள். இங்கு அதிகாரிகளும், சாதாரண மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இடிபாடுகளுக்கு இடையிலும், சுனாமி அலையினால் ஏற்பட்ட பெரும் சகதிக்குக் கீழும் ரொக்கமாக பணம் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கண்டெடுக்கப்படும் பணத்தை உடனுக்குடன் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுகிறார்கள் அங்குள்ள மக்கள். இதுவரை இலட்சக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது. சிறுதொகையாக ரொக்கமாக உள்ள பணத்தைத் தவிர சிறு பணப்பெட்டிகள், பெரிய பணப் பெட்டகங்களும் கூட இடிபாடுகளுக்கு இடையே இருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கிடைக்கும் பணத்தை அவற்றின் உரிமையாளர்களைக் கண்டுபிடித்து அவர்களிடமே திருப்பித் தர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
2 comments :
It's grate!
That's why Jappan is one of the successive supper power country in this world.
Think about our Sri lanka.
Even the government ministers will not do like that.
That's why our country is like supper hell in this world.
It's grate
Post a Comment