வடக்கில் பண்ணைகளை மீள்நிர்மாணிக்க ஏற்பாடு. ஆளுநர்
வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி பண்ணை மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குளம் பண்ணையும் கமத்தொழில் அமைச்சின் கீழ் மிக விரைவில் மீள்நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்றும் இதன் முதற்கட்ட பணிகளுக்காக தலா 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தழிழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கு அவர்களின் தேவைகளை முதலில் இனங்கண்டு கொள்ள வேண்டும். பின்னர் அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்ந்து செயற்படுத்த வேண்டுமெனவும் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment