ஜீ.எல் - லோட் கிறீன் பிரித்தானியாவில் சந்திப்பு.
பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் பிரித்தானிய வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் லோட் கிறீன் அவர்களை அவரது அமைச்சகத்தில் நேற்று (04-04-2011) சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின்போது யுத்தம் நிறைவுற்றபின்னர் நாட்டில் இடம்பெறும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக விளக்கிய அமைச்சர் ஜீஎல் இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுடன் இலங்கை செய்து கொண்டுள்ள சுநந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக விளக்கியதுடன் பிரித்தானியாவை இலங்கையில் முதலிடுமாறும் வேண்டியுள்ளார்.
அமைச்சரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய அமைச்சர் இலங்கையில் ஏலவே பல பிரித்தானிய நிறுவனங்கள் நிலைகொண்டுள்ளதாகவும் அவ்வாறு மேலும் பல நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்வதற்கு தாம் ஊக்குவிப்பதாவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment