இலங்கைக்கெதிரான அமெரிக்காவின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். விமல் தரப்பு.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டுவரும் முனைப்புகளைத் தோற்கடிக்க வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக அரசாங்கம், இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இலங்கை தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பியசிறி விஜேநாயக்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் காரியாலய அதிகாரிகளினால் வழங்கப்பட்ட போலியான தகவல்களை கருத்தில் கொண்டு அந்த நாட்டு இராஜாங்க திணைக்களம் இவ்வாறான அறிக்கையை தயாரித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment