எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்று மாடிக் கட்டிடத்தில் புதிய அலுவலகம்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்று மாடிக்கட்டிடத்தில் புதிய அலுவலகமொன்றை நிர்மாணித்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தேச புதிய கட்டிடத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான அறை, முக்கிய பிரமுகர்களுக்கான விருந்தினர் அறை மற்றும் ஊடக சந்திப்புகள், கருத்தரங்குகளுக்கான கேட்போர் கூடம் என்பனவும் உள்ளடக்கப்படும் என்று தெரிய வருகின்றது.
தற்போதைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு -07 இல் கேம்பிரிட்ஜ் பிளேசில் அமைந்துள்ள சாதாரண கட்டிடமொன்றிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்தை நடாத்தி வருகின்றார். ஆயினும் அக்கட்டிடத்தின் இடப்பற்றாக்குறை காரணமாக அதனை மூடிவிட்டு ஐ.தே.க தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இருந்தபடி தனது செயற்பாடுகளைத் தொடர அண்மையில் அவர் தீர்மானித்திருந்த நிலையிலேயே அவருக்கு புதிய அலுவலகமொன்றை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
அதன் காரணமாக அவரும் தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டு புதிய அலுவலகம் அமைக்கப்படும் வரை வழமைபோன்று கேம்பிரிட்ஜ் பிளேசில் இருந்தபடி தனது செயற்பாடுகளைத் தொடரத் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
0 comments :
Post a Comment