லங்காசிறி-கருணா கூட்டு கல்முனையில் கலைந்தது.
புலிகளிலிருந்து கருணா பிரிந்து வந்த காலத்தில் கருணாவிற்கு மிக விசுவாசமானவர் எனக் கருதப்பட்டவர் இனியபாரதி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் லங்காசிறி இணையத்திற்கு செய்தி ஒன்று தொடர்பாக கருத்து தெரிவித்த கருணா, இனியபாரதி எனும் நபரை தனக்கு தெரியாது என தெரிவித்ததாக அவ்விணையம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கல்முனை பிரதேச செயலாளர் பவநாதன் தலைமையில் பிரதேச சபையினை தரமுயர்த்துவது தொடர்பான பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் முரளிதரன், இனியபாரதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அங்குபேசிய அமைச்சர் முரளிதரன், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக தற்போது ஜனாதிபதி இணைப்பாளராகவுள்ள இனியபாரதி பெரும்சேவைகளை செய்துள்ளதாகவும், இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதிலும் பாரதியின் பங்கு அத்தியாவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் மக்கள் பாரதியின் கரத்தினை பலப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறாயின் லங்காசிறி, கருணா கூறியதாக வெளியிட்ட செய்தியின் உண்மைத்தன்மை யாது?
அன்றில் லங்காசிறி செய்தியில் உண்மையிருந்தால் (கருணா லங்காசிறிக்கு அவ்வாறு தெரிவித்திருந்தால்) கருணாவின் வார்த்தைகளின் நம்பகத்தன்மை யாது என்ற கேள்விகள் இங்கு எழுந்து நிற்கின்றது.
0 comments :
Post a Comment