மண்டையன் குழுவை மீளமைக்க முயல்கின்றார் சுரேஸ். பியசேன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சிங்கப்பூர் சென்றுதிரும்பியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிங்கப்பூர்சென்று நாடுகடந்த தமிழீழ அமைப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியதாக கருணா தெரிவித்திருந்தார். இக்கருத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுரேஸ் பிறேமச்சந்திரன் நிராகரித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசுடன் தொடர்புடையோரை சந்திப்பது தமக்கு இழுக்கான விடயம் எனக் கருதுவதாகவே சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவிக்கின்றார். தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே நாடுகடந்த அரசின் அங்கத்தினரை சந்திக்க முடியாது எனக்கொள்கை ரீதியாக தெரிவிக்கின்றபோது, உலகின் எந்த நாடு இவர்களை ஏற்றுக்கொள்ளும் என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பயணம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அம்பாறை மாவட்டத்திலிருந்து பாராளுன்றுக்கு தெரிவாகிய பியசேன அவர்களிடம் கேட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவருக்குமே விசுவாசமற்றவர்கள் எனவும் குறிப்பாக பா.உ சுரேஸ் பிறேமச்சந்திரன் சந்திரிகா அரசு காலத்தில் மண்டையன் குழுவெனும் கொலைக்கும்பலுக்கு தலைமை தாங்கியவர் எனவும் அவர் அக்காலத்தில் புலிகளுக்கு எதிராக பல கொலைகளை அரங்கேற்றியவர், அவ்வாறே புலிகளை ஒழித்துக்கட்டுவதிலும் மறைமுகப் பங்காற்றியுள்ளார். புலிகள் ஒழிக்கப்பட்டதில் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளவர்களில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஒருவர். அவர் இனிவரும் காலங்களில் மண்டையன் குழுவை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கலாம் எனவும் அவ்வாறானதோர் நோக்கத்திற்கே அவர் சிங்கப்பூர் சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment