தாய்நாட்டுக்கு திரும்பும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. முஷாரப்
தனது நாட்டுக்கு திரும்பி வரும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என பாகிஸ்தான்; முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்பு தொடர்பாக எவ்வேளையிலும் தான் இராணுவத்திடம் கோரவில்லை எனவும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அரசுதான் முடிவு செய்ய வேண்டும் இராணுவம் அல்ல என தெரிவித்த முஷாரப் தான் பாகிஸ்தான் திரும்பும் திட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துடன் தனக்கு கூடுதல் பாதுகாப்பு ஏதும் தேவையில்லை என்றும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியாது என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்ததால் நாடு திரும்பும் திட்டத்தை தான் கைவிட்டு விட்டதாக வெளியான.செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என முஷாரப் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment