கொலைக் குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றது சட்டத்திற்கு முரணானது.
கொலைகுற்றம் பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த இரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகள் சட்ட மா அதிபரினால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இச்செயற்பாடானது சட்டத்திற்கு முரணான விடயம் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பிரதம நீதியரசர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு சட்ட மா அதிபரிக்கு அதிகாரம் கிடையாது எனவும் இது ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோம் என்றும் தெரிவித்துள்ளார்.
வழக்கை தாக்கல் செய்யும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு இருக்கிறதே தவிர வழக்கு ஆரம்பித்த பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
ஆழும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திரா கத்திரியாராச்சி மீது கொலைக்குற்றச்சாட்டும் துமின்த சில்வா மீது பாலியல்பலாத்கார குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்த நி லையில் இவ்வழக்குகள் சட்ட மா அதிபர் மொஹான் டி சில்வா அவர்களால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment