சீனாவில் சூறாவளியுடன் கூடியமழை
பெய்ஜிங், ஏப்.- 19 - சீனாவின் தெற்கு பகுதியில் பலத்த சூறாவளி காற்று அடித்தது. அதே போல ஆலங்கட்டி மழையும் பெய்தது. பல இடங்களில் மேக வெடிப்புக்கள் ஏற்பட்டு மழை கொட்டியது. இதனால் பல வீடுகளின் கூரைகள் பலத்த சேதம் அடைந்தன.
காற்றின் வேகம் மணிக்கு 164 கி.மீ. க்கு கூடுதலாக இருந்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இந்த இயற்கை சீற்றத்திற்கு குவாங்ஜோகு, போஷான்,ஜாவோகிங், டோகுவான் நகரங்கள் பாதிக்கப்பட்டன. இந்த கன மழையினால் வெள்ளமும் பெருக்கெடுத்தது. இந்த சூறாவளி புயலால் 3,200 பேரருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று முனை இயற்கை சீற்றத்தால் குறைந்தபட்சம் 18 பேருக்கு மேல் உயிர் இழந்திருக்கலாம் என்றும். 45 வீடுகள் வரை இடிந்து விழுந்தன என்றும் சுவர்கள், கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டதால்தான் பெரும்பாலான மக்கள் பலியானார்கள் என்றும் அஞ்சப்படுகிறது. இதுவரை 155 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும். சுமார் 1084 ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment