பிள்ளையான் புலிகள் சிங்கப்பூரில் சந்திப்பு.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானும் புலம்பெயர் நாடுகளை தளமாக கொண்டுள்ள புலிகளும் சிங்கப்பூரில் சந்தித்து பேசியதாக அறியமுடிகின்றது. கடந்தவாரம் மருத்துவ சிகிச்சைக்கென சிங்கப்பூர் சென்றிருந்த பிள்ளையான் சிங்கப்பூரில் லிற்றில் இந்தியா எனப்படுகின்ற செரங்கூன் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில்வைத்து புலிகளின் முக்கியஸ்தர் கலாநிதி ராமசாமி மற்றும் சிலரை சந்தித்து பேசியதாக அறியமுடிகின்றது.
இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களை இனவாத மாயைக்குள் சிக்கவைத்து தமது அரசியல் மற்றும் ஆயுத வன்முறைகளை முன்னெடுக்க முயலும் புலிகளின் புலம்பெயர் வலையமைப்பு கடந்தவாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு வொன்றையும், பிள்ளையானையும் இருவேறு இடங்களில் சந்தித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக தொடர்ந்தும் தமது பாசிசக் கொள்ளையை மக்கள் மத்தியில் திணிக்க முயலும் புலிகள், அச்செயற்பாட்டுக்கு தேவையான ஆயுத வன்முறைகளை பிள்ளையான் ஊடாக மேற்கொள்ள முனைவதாக நம்பப்படுகின்றது.
டென்மார்கிலிருந்து புலிகளின் புலநாய்வுத்துறைக்காக பொட்டுவின் கீழ் செயற்பட்டுவந்த நிக்சன் என்பவர் புலிகளின் தலைமை அழித்தொழிக்கப்பட்ட பின்னர் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்பின் முக்கியஸ்தராக செயற்பட்டு வருகின்றார். இவர் தற்போது இலங்கையில் ஏதாவதுதோர் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் புலிகளின் புலம்பெயர் பணவசூலிப்புக்கு வலுச்சேர்க்க முடியும் என நம்பும் நிக்சன் பிள்ளையானுடன் இணைந்து தனது இலக்கினை அடைய முனைவதாக நம்பமுடிகின்றது.
எது எவ்வாறாயினும் நிலைமைகள் இலங்கை அரச புலனாய்வுத் துறையினரின் தேடுதலுக்குட்பட்டுள்ளதுடன், பிள்ளையான் புலிகளுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்திற்காக தண்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment