தமிழ்மொழி நாடாளுமன்றில் புறக்கணிப்பு.
உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டதுடன் அதன் பரதிகள் தமிழில் வெளியிடப்படவில்லை எனவும்
ஆங்கிலம் மற்றும் சிங்க மொழிகளில் இந்த சட்ட மூலத்தின் பிரதிகள் வெளியிடப்பட்டிருந்தன எனவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் பிரதிகள் தமிழில் வெளியிடாமல் அதனை நிறைவேற்றினால், அது அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மாவட்ட எல்லைகளை நிர்ணயம் செய்யும் குழுவை அமைச்சர் நியமிக்க முடியும் எனவும் தாம் அதனை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
எல்லையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment