இங்கிலாந்து இளவரசர் புதிய சாதனை.
இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 1841-ம் ஆண்டில் விக்டோரியா இருந்த போது அவருக்கு மகன் பிறந்தார். பின்னாளில் ஏழாம் எட்வர்டு மன்னரான அவர், பிறக்கும் போதே பட்டத்து இளவரசர் உரிமை பெற்றார். 1901-ம் ஆண்டு விக்டோரியா ராணி மரணம் அடையும் வரை மொத்தம் 59 ஆண்டுகள் 2 மாதம் 13 நாட்களுக்கு பட்டத்து இளவரசராகவே நீடித்தார். இதன் மூலம், நீண்ட கால பட்டத்து இளவரசர் என்ற சாதனையை ஏழாம் எட்வர்டு படைத்தார்.
இந்த சாதனையை, மூன்று தலைமுறைக்கு பிறகு தற்போதைய இளவரசர் சார்லஸ் கடந்த புதன்கிழமை முறியடித்து இருக்கிறார். சார்லசுக்கு 3 வயதான போது 1952-ம் ஆண்டில் தற்போதைய ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்றார். அன்று முதல் `பட்டத்து இளவரசராக' சார்லஸ் நீடிக்கிறார். கடந்த புதன் கிழமையுடன் 59 ஆண்டுகள் இரண்டு மாதம் 14 நாட்கள் முடிந்து விட்டன. இதனால், இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட கால பட்டத்து இளவரசராக இருந்து சாதனையை சார்லஸ் படைத்திருக்கிறார்.
ராணி எலிசபெத்துக்கு தற்போது 85 வயது ஆகிறது. அவருடைய தாயார் முதலாம் எலிசபெத் போல இவரும் 100 வயதை தாண்டி வாழ்ந்தால் சார்லஸ் சாதனையை யாராலும் மிக எளிதில் முறியடிக்க முடியாது. இளவரசர் சார்லசுக்கு தற்போது 62 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment