மகாவம்சம் மீண்டுமொருமுறை எழுதப்படுகின்றது.
இலங்கையின் வரலாற்று நூல் எனச் சொல்லப்படுகின்ற மகாவம்சம் மீண்டுமொருமுறை எழுதப்படுகின்றது. இந்நூலில் மேலுமொரு அத்தியாயம் இணைக்கப்படுமெனவும், அவ்வத்தியாயத்தில் 1978 ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரையான வரலாற்றுப்பதிவுகள் இணைக்கப்படவுள்ளதாக நம்பப்படுகின்றது. மகாவம்சம் எனும் நூலில் மாற்றங்கள் அல்லது இணைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின் பௌத்த மகா சங்கங்களின் கூட்டினால் அங்கீகாரம் வழங்கப்படவேண்டும். அச்சபைகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வத்தியாயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் பிரிந்திருந்த இலங்கை இணைக்கப்பட்டதான வரலாறு பதியப்படும் என நம்பப்படுகின்றது. இதன் அடிப்படையில் இலங்கையை ஆண்ட முக்கிய மன்னர்களின் வரிசையில் ஜனாதிபதி மஹிந்தவும் இடம்பெறுவார்.
0 comments :
Post a Comment