மிரட்டல் மின்னஞ்சல் : புலிகள் மீது சந்தேகம் வலுக்கிறது. நோர்வேயில் தீவிர விசாரணை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உலக கிண்ண போட்டிகளை நேரடியாக பார்வையிடச் சென்றிருந்தபோது குறிப்பிட்ட மைதானத்தில் 30 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுத்தோரை கைது செய்வதற்கு இந்திய அரசு நோர்வே அரசின் உதவியை நாடியுள்ளது.
குறிப்பிட்ட மின்னஞ்சல் நோர்வே நாட்டிலிருந்து அனுப்பப்பட்டமை முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததையடுத்தே இந்தியப்பொலிஸார் நோர்வேயின் உதவியை நாடியுள்ளதுடன் நோர்வே நாட்டிலிருந்தே குறிப்பிட்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நோர்வேயின் குற்றப்புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த சிரேஸ் பொலிஸ் அதிகாரியான Leiv-Rune Gully என்பவர் தெரிவித்துள்ளதுடன், இம்மின்னஞ்சல் அனுப்பப்படுவதற்கு தமது நாட்டின் மென்பொருள் ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிசெய்துள்ளார். அத்துடன் குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்தி உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Lashkar-e-Taiba எனப்படும் பாக்கிஸ்தானை தளமாக கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில் குறிப்பிட்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அம்மின்னஞ்சலில் 30 குண்டுகள் விளையாட்டு மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ளது எனவும் செய்மதி சமிக்கையூடாக தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு தரப்பினர், இலங்கை ஜனாதிபதியும் , கிறிக்கட் அணியும் இந்தியா வந்துள்ளமையால் புலிகள் தரப்பினரே இவ்வாறான போலி அச்சுறுத்தலை விடுத்திருக்க முடியும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ள ஐபி விலாசம் நோர்வேயை சேர்ந்தாக உள்ள அதேதருணத்தில் புலிகளின் மிக முக்கியஸ்தர்கள் நோர்வேயிலேயே எஞ்சியுள்ளதாகவும் அவர்களே இச்செயலை செய்திருக்க முடியும் எனவும் சந்தேகம் தொடர்பான விவாதங்கள் நீடிக்கின்றது.
0 comments :
Post a Comment