Wednesday, April 13, 2011

உள்ஒளி - இனியவன் இஸாறுதீன் -

காற்பந்து போல

காலங்களோடு உருள்கிறது

வாழ்க்கை

கவலை மிகுந்த

இருட்டோடு விடிகிறது

பொழுது

எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு

நடக்கிறது

எதிர்காலம்

தன்னலத்தில்

முடிகிறது

பொதுநலம்

இனவாதத்தைப்

பரிந்துரைக்கிறது

மனிதநேயம்

ஆயுதஅழுக்கினால்

அசுத்தமானது

ஆறறிவு

மக்கள் உரிமையை

சூறையாடுகிறது

அரசியல்

அந்நியத்தை மட்டும்

துதிக்கிறது

ஆன்மீகம்

இரக்கநெய்யின்றி

இறுகிப் போனது

மாந்தர் இதயம்

தாய்மொழி தமிழில்தான்

சாதிக்க வேண்டும்

நாம் எதையும்

இனி வரும் புத்தாண்டுகள்

இல்லங்களைப் புதுப்பிப்பதை விட

உள்ளங்களைப் புதுப்பிக்கட்டும்
( 'மழை நதி கடல்' கவிதைநூல் ) VII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com