ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜெயசிங்க கணவன் மீது புகார்.
இலங்கையின் அதிவேக ஓட்ட வீராங்கணையான சுசந்திகா ஜயசிங்க தனது கணவரான தம்மிக்க நந்தகுமாரவினால் தாக்கப்பட்டதாக கூறி, பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். இப்புகாரினை அடுத்து சுசந்திகா ஜயசிங்கவின் கணவரான தம்மிக்க நந்தகுமார ஹொரணை நீதவான் நீதிமன்றி தனது சட்டத்தரணியூடாக ஆஜராகியிருந்தபோது, விளக்க மறியலில் வைக்கப்பட்டதுடன் இன்று அவருக்கு ஹொரணை நீதவான் நீதிமன்று பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சுசந்திக்கா ஜெயசிங்க ஒலிம்பிக் ஒட்டப்போட்டியில் பதக்கம் வென்றவர் என்பது கடந்த பொதுத்தேர்தலில் அரசியலில் நுழைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment