Sunday, April 3, 2011

சிறுகைத்தொழில் அமைச்சரின் சிறுபிள்ளை பதிலும் : முரளியின் மாமியாரின் பதிலும்.

இலங்கை இந்திய அணிகள் உல ககிண்ணத்தினை சுவிகரித்துக்கொள்வதற்காக போட்டிகள் ஆரம்பித்திருந்தபோது நாட்டுப்பற்றுள்ள அனைவரும் தமது நாட்டு அணி வெற்றிகொள்ள பிரார்த்தனைகளை மேற்கொண்டிருந்த தருணத்தில் எம்நாட்டு சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறுப்பிள்ளைத்தனமாக இருநாடுகளும் வெற்றிபெறதான் வேண்டுவதாக தெரிவித்து இந்தியாவின் வாலினை மிக இறுக பிடிக்க முனைந்திருந்தமை யாவரும் அறிந்தது.

இந்தியாவிலே போட்டிகள் ஆரம்பமாக இருந்த நிலை யில் நாட்டின் ஜனாதிபதி இந்தியா சென்று இந்திய திருத்தலங்களிலே இலங்கை அணிக்காக ஆசிவேண்டி பிரார்த்தனைகளை மேற்கொண்டிருந்த தருணத்திலேயே அமைச்சரவை அந்தஸ்துள்ளவர் எனக் கூறப்படுகின்ற எமது அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தமை யாவரும் அறிந்தது.

இது இவ்வாறிருக்க இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி சமநிலையில் முடிவடைய வேண்டும் என தான் விரும்புவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் மாமியாரான டாக்டர் நித்தியா ராமமூர்த்தி கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை இப்போட்டியில் பெற வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முரளிதரனின் மனைவி மதிமலரின் தாயாரான டாக்டர் நித்தியா ராமமூர்த்தி சென்னையில் பிரபலமான மருத்துவர் ஆவார். தனது மகள் மதிமலர் முத்தையா முரளிதரனை திருமணம் செய்து இலங்கை மருமகள் ஆகிவிட்ட நிலையில் எந்த அணிக்கு ஆதரவளிப்பது என்பதில் டாக்டர் நித்தியாவுக்கு தடுமாற்றம்.

தனது தாய்நாடான இந்திய அணிக்காக அல்லது மருமகனின் இலங்கை அணிக்காக ஆதரவளிப்பீர்கள் என டாக்டர் நித்தியா ராமமூர்த்தியிடம் கேட்டபோது, அது கடினமான ஒரு கேள்வி என பதிலளித்துள்ளார்.

'இந்திய பாரம்பரியத்தின்படி, எனது மகள் வெளிப்படையாகவே தனது கணவரின் அணிக்கு ஆதரவளிப்பார். நானும் எனது மருமகனுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதேவேளை சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை இப்போட்டியில் பெற வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். அது நடந்தால் இலங்கை அணியின் வெற்றிவாய்ப்பு குறையும். எனவே எனக்கு குழப்பமாகவுள்ளது' என அவர் கூறியுள்ளார்.

இந்தியப் பிரபல குடு ம்ப ம் ஒன்றினைச் சேர்ந்த மேற்படி பெண்மணி தனது மகளின் எதிர்காலத்தினையும் மகள் , மருமகனின் சந்தோஷத்தினையும் தருத்தில்கொண்டு இலங்கை வெற்றிபெறவேண்டும் என விரும்பியிருக்கும்போது, எமது அமைச்சர் இலங்கை அணிவெற்றி பெறவேண்டும் என வாழ்துவதன் மூலம் இந்தியாவின் சிறு எதிர்பை சம்பாதித்துவிடுவேனோ என்ற அச்சத்தில் இவ்வாறான கருத்தினை கூறியிருக்கவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com