ஐ.நா குழுவின் அறிக்கைக்கெதிராக நாடு பூராகவும் 1 மில்லியன் கையொப்பம்.
வடகிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு கருணா ஏற்பாடு.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கான எதிர்ப்பினை தெரிவிக்கும் பொருட்டு நாடுபூராகவும் மக்களிடமிருந்து 1 மில்லியன் கையொப்பங்களை திரட்டுமாறு நாட்டின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், அப்பணிக்கான பொறுப்புக்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இப்பணியினை வடகிழக்கில் முன்னெடுப்பதற்கான பொறுப்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் தலைவமீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மே தினத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துவர் என கருணா தெரிவித்துள்ளார்.
ஆதேநேரம் இம்முறை மேதினக் கொண்டாட்டங்கள் ஐ.நா வுக்கு எதி ரான கோஷமாக அமையவேண்டும் எனவும் நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் கொழும்பில் திரளவேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுதல் விடுத்துள்ளதாக நம்பப்படுகின்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அம்மாகாணங்களைச் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
மேற்படி அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வர் என சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளர். யுத்தம் முடிந்துள்ள நிலையில் சகவாழ்வுக்கும் ஒற்றுமைக்கும் சிறந்த வாய்ப்பிருப்பிருக்கிறது. எனினும் சில சக்திகள் இதை குழப்ப முயற்சிக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் மீது ஐ.நா. மேற்படி குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு அடிப்படையில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் யுத்தகாலத்தில் மனிதாபிமானத்திற்கு எதிராக அதிக போர்க் குற்றங்களை இழைத்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
600 தமிழ் மக்கள் புலிகளால் எவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரட்னம் விளக்கியுள்ளார் என்பதையும் ஐ.நா புரிந்து கொள்ளவேண்டும் எனவும் முரளிதரன் நினைவுகூட்டியுள்ளார்.
2009 மே மாதம் யுத்தம் முடிவுற்றபின் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவுக்கு வந்த முன்னாள் எம்.பி. கனகரட்னம் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment