கே.பி யுடனனான உடன்பாட்டை வெளியிடுக!. ஜனாதிபதிக்கு CaTpad வேண்டுகோள்.
சமாதானத்திற்கும் ஜனனாயகத்திற்குமானதுமான கனடியத் தமிழர் ஸ்தாபனம், கடந்தகாலப் புலியின் சர்வதேச செயற்பாடுகளின் தலைவனும் ஆயுதக்கடத்தல் மன்னனுமான குமரன் பத்மனாதன் அல்லது கே.பி என்றழைக்கப்படுபவரின் கீழ் நிர்வகிக்கப்படும் வடகீழ் புனருத்தாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பு பற்றிய உண்மைகளைச் சொல்லும்படி சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்சவைக் கோருகிறது.
ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ்சவின் கீழ் ஆட்சிஅதிகாரம் செய்யப்படும் தற்போதய அரசாங்கம், இலங்கை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அத்தனையையும் மீறியதோடு பாரளுமன்ற ஜனநாயகத்தையும் மதிக்காததோடு, வடகீழ் புனருத்தாரண மற்றும் அபிவிருத்தி அமைப்பின் உண்மைகளையும், அரச யந்திரத்தின் இரகசிய ஒத்தாசையோடு அது செய்யும் சதிச் செயற்பாடுகளையும் மறைக்கிறது என்ற கடுமையான விவாதங்களை நாம் வைக்கிறோம்.
வடகீழ்மாகாண புனருத்தாரண மற்றும் அபிவிருத்திகளுக்கான அமைப்பு இலங்கையில் பதியப்படவில்லை என்றும் கே.பியை ஏதும் புனருத்தாரண வேலைகளைச் செய்ய அனுமதிப்பதில்லையென்றும் முன்பு பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. பின்பு அரசாங்கம் கே.பி புலிப்போராளிகளைப் புனருத்தாரணம் செய்வது அடங்கலான புனருத்தாருண வேலைகளைச் செய்ய அனுமதி அளித்ததை ஏற்றுக் கெண்டது.
கே.பி மில்லியன் கணக்கான புலி நிதிகளை இலங்கைக்குக் கொண்டு வந்ததாகவும் இன்றுவரை அந்த நிதிகள் பற்றிய கணக்கு வழக்குகளோ, புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிதித்தொகைகளின் விபரங்களோ அவை எங்கே வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியோ எந்த அறிவித்தல்களையும் ஆதாரங்களையும் அரசாங்கம் கூறவில்லை.
புலிகளிடமிருந்த பெறப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட நிதி அரச கணக்கில் போடப்பட்டது பற்றியோ அல்லது அது திரும்பவும் கே.பி யின் புலிப்பணப்பெட்டியான வடகீழ்மாகாணப் புனருத்தாரண அமைப்புக்குள் போனது பற்றியோ அரசாங்கம் ஒரு சொல்லுக்கூடச் சொல்லவில்லை. புலிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிதி புலியின் வங்கிக்கணக்கில் பாய்ந்து வடகீழ்மாகாணப் புனருத்தாருண அமைப்பால் கட்டுப்படுத்தப் பட்டு, அது தனித்துப் புலிப் பேராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் மாத்திரம் புனருத்தாரணம் செய்யப் பயன் படுத்தப்பட்டு விஷேடமாக மாபியா அரசனான கே.பி யின கைளைப் பலப்படுத்தி வடக்கில் ஜனாதிபதியின் கையாளக முடிசூட்டப் படுகிறார் என்று நாம் சந்தேகிக்கின்றோம்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி கே.பியைத் தமது அங்கத்தவராக ஏற்கத் தயாரென்ற பிரதமர் டி.எம்.ஜெயரத்தினேயின் வெளிப்படையான பொது அறிவிப்பானது, கே.பி வெகு சீக்கிரத்தில் வடக்கின் அரசியற்புள்ளியாக மாற்றப்பட்டுள்ளார் என்ற எமது விவாதங்களைப் பலப்படுத்துகின்றன. இந்தப் பிரசித்த அறிவிப்பானது ஜனாதிபதியின் உத்தரவும் ஆசீர்வாதமும் இல்லாமல் நடந்திருக்காது. இது மேலும் ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் கேபிக்குக் கிடைத்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
கே.பி இப்பொழுதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவர் அரசாங்க கட்டுப்பாட்டினுள் உள்ளார் என்றும், விசாரணைகள் முடிந்தபின்பு அவருக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் பல சந்தர்ப்பங்களில் அரசாங்க மந்திரிகள் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்கள். ஆளுங்கட்சின் ஆதரவின் காரணமாக கே.பி செய்த நெட்டூரங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டார் என்றும் சட்டபூர்வமான தண்டனையிலிருந்து அவர்
தப்பிவிடுவார் என்றும் நாம் நம்புகின்றோம்.
ஆகவே புலிக்குள்ளே கே.பி என்ன பாத்திரத்தை வகித்தார் என்பதையும் அவர் புலியின் சர்வதேசச் செயற்பாடுகளின் தலைவராக இருந்து என்னென்ன செய்தார் என்பதையும் ஆராய ஒரு பாராளுமன்ற விசாரணைக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று சமாதானத்திற்கானதும்
ஜனனாயகத்திற்கானதுமான கனடியத் தமிழர்களின் அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கோருகின்றது.
அரசாங்கம் பெற்றுக்கொண்ட புலிகளின் கடல்கடந்த சொத்துக்கள் எவ்வளவு என்பதைப் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் இலங்கை ஜனாதிபதியைக் கோருகின்றோம். இலங்கைப் பொதுமக்கள் இதுபற்றிய உண்மையை அறிய என்றும் உரிமை உடையவர்களாகும். மூன்றுதசாப்தங்களாகப் பயங்கரவாதத்தாலும் பிரிவினைவாதத்தாலும் துன்பப்பட்ட இலங்கைப் பிரைஜைகளுக்கு இதுபற்றி அறிய அத்தனை உரிமையும் இருக்கிறது. பாதுகாப்புக் காரணமாக இந்த இரகசியங்களைக் கூறமுடியாது என்ற காரணம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அரசாங்கம் புலிகளிடமிருந்து பெற்ற கடல்கடந்த சொத்துக்கள் எவ்வளவு என்பதையும் அதிலிருந்து எவ்வளவு இலங்கைக்குக் கொண்டுவரப் பட்டது என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.
பெறப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும் அதிலிருந்து எவ்வளவு பாவிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோருகின்றோம்.
சர்வ அரசியற்கட்சிகளின் பாராளுமன்ற அங்கத்தவர்களாலான ஒரு பாரளுமன்ற விசாரணைக்கு குழு ஒன்றை ஏற்படுத்தி வடகீழ் புனருத்தாரண மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பில் கே.பியின் பங்கு என்ன என்பதைக் கண்காணிக்கவும் அங்கே என்னவிதமான அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுள்ளன என்பது பற்றியும் அதற்குத் தேவையான நிதி எங்கிருந்து பெறப்பட்டன என்பது பற்றியும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்தவும் வேண்டும் என்று கோருகின்றோம். எங்கிருந்து பணம் வந்தது என்பதும் அது எப்படி உபயோகப்படுத்தப்பட்டது என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும்.
புலியின்கட்டுப்பாட்டினுள் உள்ள புலம்பெயர் அமைப்புகளையும, வன்னிக்காட்டுத்தர்ப்பாரின் பழைய பாதுகாவலர்கள் கேபியைச் சுதந்திரமாகச் சந்திப்பதையும், இவர்கள் புனருத்தாருணவேலைகளில் எவ்வாறு பங்கெடுக்கின்றார்கள் என்பதையும், இப்பேற்பட்ட செயற்பாடுகள் எதிர்காலத்தில் தேசத்திற்குப் பெரிய பாதுகாப்புப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டி இவை அனைத்தையும் கரிசனையோடு கண்காணிக்கும்படி நாம் இலங்கை அரசாங்கத்தைத் வேண்டுகின்றோம்.
எமது அக்கறை என்னவெனில் நானவித இலங்கையர்களின் பாதுகாப்பும், நாட்டிலே சமாதானம் நிர்மாணிக்கப்படுவதும் ஆதலால் சமாதானத்திற்கும் ஜனனாயகத்திற்குமான கனடியத் தமிழர்களாகிய நாம் எமது கோரிக்கையை நிறைவேற்றும்படி இலங்கை ஜனாதிபதியை வேண்டுகின்றோம்.
0 comments :
Post a Comment