உருத்திரகுமாரிடம் கேள்வி கேட்டமைக்காக மிரட்டல் விடும் எதிரி இணையம்.
நாடுகடந்த(கடத்தப்பட்ட) தமிழீழம் எனும் காகிதக்கப்பல் ஓட்டிக்கொண்டிருக்கும் உருத்திரகுமார் சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து ஒலிபரப்பாகும் புலிகளின் ஊதுகுழல் வானொலி ஒன்றில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் காதில் புலிகள் வைத்த பூ விழுந்துள்ள நிலையில் அதை மீண்டும் எடுத்து வைப்பதற்கு முயன்றிருந்தார்.
இம்முயற்சிக்கு தமிழ் மக்களின் கேள்விகளுக்கு உருத்திரகுமார் பதிலளிக்கப்போகின்றார், விரும்பியோர் கேள்விகளை அனுப்பி வைக்கலாம் என சில ஊடகங்கள் விளம்பரமும் தெரிவித்திருந்தன. இவ்விளம்பரங்களின் அடிப்படையில் கேள்விகளை அனுப்பி வைத்தபலர் வேண்டிக்கட்டியுள்ளமையும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமையும் வெளிந்துள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ளவர் அருகன். இவர் கடந்த காலங்களின் தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் தமிழ் தேசியம் எனப்படும் புலித்தேசியத்தை ஆதரித்த நபராகவே செயற்பட்டுவந்தார். ஆனால் புலிகள் தமிழ் மக்களை பணயக் கைதிகளாகவும் , மனிதகேடயங்களாகவும் பாவிக்கின்ற பாசிஸ்டுகள் என அறிந்து கொண்டபோது, பிரபாகரன் தமிழ் மக்களை விடுவித்து சரியானதோர் வழியை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தவர். இதனால் இவருக்கு பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலை யில் உருத்திரகுமாரிடம் பொதுமக்கள் கேள்விகளை கேட்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தபோது, எதிரி இணையத்திற்கு உரித்திரகுமாரனுக்கான கேள்விகளை அனுப்பி வைத்துள்ளார். கேள்விகளைப் பார்த்து மிரண்ட எதிரி அருகனுக்கு அனுப்பியுள்ள பதிலினை கீழே தருகின்றோம். கேள்விகளுக்கு பதில் இல்லாவிட்டால் இவ்வாறான பதில்கள்தான் புலிகளிடமிருந்து வரும் என்பதற்கு மேலுமோல் அத்தாட்சியே இது.
எதிரியின் மிரட்டல்
From: ethiri thiri
Sent: Monday, March 21, 2011 12:42 AM
To: arugan@hotmail.it
Subject: நக்கி பிழைக்கும் பிழைப்பை விடுத்து...மனிதனாக மாறுங்கள் .
இத்தாலியில் இருந்து சிங்கள கைக்கூலியாக வேலை பார்க்கும் உம்மை போன்றவர்கள் தமிழர்களின் தன்னாட்சு உரிமை பற்றி பேசவது நகைப்பு .அது நிற்க ..
தமிழீழ தேசிய தலைவருக்கு வகுப்பெடுக்க முனைந்த உமது குருட்டு சிந்தனை ..உம்மை நீரே உமக்குள் தலைவன் என நினைத்து சமுகத்தை சீர் செய்ய நினைக்கும் சக்தியென நினைத்து நக்கி பிழைக்கும் உமது ஈன செயல்கள் ..பின்னியில் மக்கள் உள்ளனர் என கொக்கரிப்பு இடுகின்றீர் .
இத்தாலியில் உள்ள தமிழர்களை காட்டி கொடுத்து வயிறு வளர்க்கும் உம்மை போன்றவர்கள் ..இருப்பதை விட இறப்பது மேல் .. உமது இந்த சிங்கள கூலியின் கருத்தை ஈழ தமிழர் முன் வைத்தால் மக்கள் இவ்வாறுதான் சொல்வார்கள்.
நீர் ஒரு மாயைக்குள் இருக்கின்றீர் அதில் இருந்து முதல் அகன்று ..நல்ல மனிதனாய் மாறுவதற்கு முன் மக்கள் நேசிக்கும் ஒரு தமிழ் மகனாய் முதலில் வாழ பழகுங்கள் .
நக்கி பிழைக்கும் பிழைப்பை விடுத்து...மனிதனாக மாறுங்கள் .
எதிரியின் மிரட்டலுக்கு அருகன் அனுப்பிய பதில்.
From: அருகன் Arugan
Sent: Monday, March 21, 2011 9:48 AM
To: ethiri thiri
Subject: Re: நக்கி பிழைக்கும் பிழைப்பை விடுத்து...மனிதனாக மாறுங்கள் .
என்னைப்பற்றி நன்றாகத்தெரிந்தவர் போலும், தமிழ்ப் பண்பு ஓங்கியும் தக்க பதில் எழுதியிருக்கின்றீர்கள்... மிக்க நன்றிகள் மதிப்பிற்குரியவரே!!!
எனது முற்போக்குச் சிந்தனையினை பின்வருகின்ற வருடங்களில் செயற்படுத்துவோருக்கு, இயலாத்தன்மையில் சுயமாக வாழ்பவரைப்பார்த்தால் நக்கிப் பிழைப்பவரைப்போல்தான் தெரியும்... கேபி... மற்றும் இலங்கையின் கைக்கூலியாகச் செயற்படுவோரை எதிர்க்கத்தரணியில்லாது பல்லாயிரம்தமிழர்கள் நன்மைக்காகச் சுயமாகச் செயற்படும் எனக்குத் தாங்கள் வழங்கிய பதில் மிக்கச் சரியானதே... தங்கள் பதிலுகன்கு நன்றிகள். முதலில் என்னைப்பற்றி நன்கு அறிந்துகொள்ளுங்கள்... ... கேள்விகளுக்குப் பதில் தரமுடியாவிட்டால் இப்படித்தான் அன்றில் இருந்து இன்றுவரை வரலாறாக உள்ளது.
0 comments :
Post a Comment