ஒபாமாவை ஒதுக்கி உலகின் அதிகாரமிக்கோர் பட்டியலில் சீன அதிபர் முதலிடம்:
சோனியாவுக்கு 9வது இடம்-மன்மோகன்?
போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் அதிகாரமிக்க மனிதர்கள் பட்டியலில் சீன முதல்வர் ஹூ ஜின்டாவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 9-வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 18-வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தற்போது 2-வது இடத்தில் இருக்கிறார். சவுதி மன்னர் அப்துல்லா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 9-வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 18-வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வெளிநாடு வாழ் இந்தியரான லக்ஷ்மி மிட்டல் ஆகியோர் 34 மற்றும் 44வது இடங்களைப் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் உள்ள மேலும் சில பெரும்புள்ளிகள் விவரம் வருமாறு,
ரஷ்ய பிரதமர் புடின் - 4வது இடம்
போப் 16ம் பெனடிக்ட் - 5வது இடம்
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் - 6வது இடம்
இங்கிலாந்து பிரதமர் ஜேம்ஸ் காமரூன் - 7வது இடம்
பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் கயானி - 29வது இடம்
ஒசாமா பின் லேடன் - 57வது இடம்.
...............................
0 comments :
Post a Comment