கோட்டாவை குறிவைத்த தமிழ் இளைஞனுக்கு விளக்கமறியல் நீடிப்பு.
கொழும்பு - பித்தளை சந்தியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை கொலை செய்ய உதவி புரிந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் வெளிநாடு சென்று திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை வைத்தே குறித்த சந்தேகநபர் தொடர்பான தகவல் வெளியானதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment