பிரபாகரனுக்கு தங்கப்பென் வாங்கிக்கொடுத்த வர்த்தகர்: தமிழ் அமைச்சருடன் பேச்சுவார்த்தை.
பிரித்தானியாவில் புலிகளின் பணத்தில் பெரும் வர்த்தக புள்ளியாக வலம்வருகின்ற இணுவில் மனோ என அறியப்படும் நபர் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது. பிரித்தானியாவை தளமாக கொண்டுள்ள தமிழ் திரைப்பட வெளியீட்டு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான தனது நண்பருக்கு யாழ்பாணத்தில் பல்திரையரங்கு ஒன்றினை கட்டுவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளும் பொருட்டே இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இலங்கைநெற் அறிகின்றது.
குறிப்பிட்ட வர்த்தகர் புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒப்பந்தம் செய்துகொள்ள ஏற்பாடாகியிருந்த தருணத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வொப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்காக தங்கப்பென் ஒன்றினை அன்ரன் பாலசிங்கம் ஊடாக அனுப்பி வைத்த பெருமைக்குரியவர் எனப் பேசப்படுகின்றது.
இவ்வாறு தங்கப்பென்னை பிரபாகரனுக்கு வழங்கி சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப்பட்ட பின்னர் 2003 ம் ஆண்டு காலப்பகுதியில் வன்னி சென்ற மேற்படி நபர் புலிகளின் உதவியுடன் வன்னியில் உள்ள ஏழை மக்களின் பல காணிகள் , வீடுகளை அறாவிலையில் கொள்வனவு செய்துள்ளதாகவும், அவற்றையெல்லாம் தற்போது காத்துக்கொள்வதற்காகவே அவர் அமைச்சருடன் ஒட்டியுள்ளதாகவும் நம்பமுடிகின்றது.
வர்த்தகருக்கும் அமைச்சருக்கும் ஏற்பட்டுள்ள உறவினை அறிந்த புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் அரசுடன் பேசுவதாயின் கே.பி ஊடாக பேசுவதை தவிர்த்து ஏன் குறிப்பிட்ட அமைச்சருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளீர்கள் எனக்கேட்டபோது, கே.பி பிரபாகரனுடனிருந்து அவருக்கே குழிபறித்தவர் எனவும் அமைச்சர் பிரபாகரனை எதிர்பது போன்று பாசாங்கு செய்தாலும் உண்மையில் அவர் பிரபாகரனே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்பதை ஏற்று பிரபாகரன் அரசியலினுள் பிரவேசிக்கும்போது நான் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன் என பகிரங்கமாக அறிவித்திருந்தவர் என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாமையே உங்கள் இந்த கேள்விக் காரணம் என தெரிவித்துள்ளார்.
1 comments :
இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள், சுயநலவாதிகள் புலம்பெயர் வெளிநாடுகளில் நிறைய உள்ளார்கள்.
பலர் அங்கு தமிழ் மக்களிடம் புலிகளுக்கு, தமிழீழ மக்களுக்கு என சேர்த்து, சுருட்டி, கொள்ளையடித்த பணத்தை கொண்டுவந்து அரசியல்வாதிகளை பிடித்து ஸ்ரீலங்காவில் இரகசியமாக முதலீடுகள் செய்து விட்டு போய்விடுகிறார்கள்.
இத்தனைக்கும் ஒரு சதம் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கோ அல்லது ஏழை மக்களுக்கோ கிடைத்ததில்லை.கிடைப்பதில்லை.
ஒரு சிலரின் பெயர்களே வெளிவருகின்றன எனினும், வெளிநாட்டு தமிழர்கள் இவர்களை தட்டிக்கேப்பதுமில்லை, கண்டுகொள்வதும் இல்லை.
எனவே அவர்களின் நோக்கமும் அதுவோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
Post a Comment