ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து அசாஞ்சே மேல்முறையீடு.
பாலியல் பலாத்கார வழக்கில் கைதான விக்கிலீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தம்மை ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து பிரிட்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆஸ்ட்ரேலியாவை சேர்ந்த 37 வயதான ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அமெரிக்காவின் இராணுவம் மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் இவர் ஸ்வீடன் சென்று இருந்தபோது ஆணுறை இல்லாமல் இரண்டு பெண்களிடம் பாலியல் உறவு கொண்டதால் அந்நாட்டு சட்டப்படி, அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் லண்டன் சென்றபோது கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் ஸ்வீடன் காவல்துறை கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாங்கே வழக்கு தொடர்ந்தார்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், அவரை விசாரணைக்காக ஸ்வீடனுக்கு அனுப்பலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில் பிரிட்டன் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த தகவலை அசாஞ்சேவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment