லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: பிரிட்டன் எச்சரிக்கை.
மக்கள் மீது குண்டுகளை வீசும் லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பிரிட்டன் பிரதமர் கேமரூன் எச்சரித்துள்ளார். லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள், தலைநகர் டிரிபோலி உள்ளிட்ட பல இடங்களை கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு இராணுவத்தினரும் பெருமளவில் ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் கடாபி இராணுவத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள தமது அதி தீவிர விசுவாச படையை இன்று கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏவிவிட்டார். டிரிபோலியில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது பீரங்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் கடாபி ஆதரவு இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், கடாபிக்கு எதிராக போராடும் மக்கள் மீது குண்டு வீசும் இராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்து உள்ளார்.
மேலும் அமெரிக்க போர்க்கப்பல்களும், இராணுவ விமானங்களும் லிபியாவை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 comments :
Well, do it today.
Post a Comment