ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்து கொலை!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 24 வயது இந்திய மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். கடந்த மார்ச் 11 காலை, மிடீபார்க் அருகே கால்வாய் பகுதியில் சூட்கேஸ் ஒன்றை கட்டுமானத் தொழிலாளர்கள் கண்டறிந்தனர். அதில், பெண் ஒருவரின் சடலம் இருந்தது என உள்ளூர் காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்திய மாணவி தோஷா தக்கர் என்பவரே அந்தப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாணவின் பிரேதப் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் ஆஸ்திரேலிய காவல்துறை, இந்தச் சம்பவம் தொடர்பாக டேனியல் ஸ்டானி என்ற 19 வயது இளைஞனை கைது செய்துள்ளது.
அந்த இளைஞன் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிட்னியில் உள்ள காலேஜ் ஆஃப் பிஸினஸ் அண்ட் ஐ.டி.யில் படித்து வந்தவர் தோஷா.
தோஷா கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தோஷாவை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இளைஞன் டேனியலுக்கு ஜாமீன் வழங்க உள்ளூர் கோர்ட் மறுத்துள்ளது.
0 comments :
Post a Comment