புலம்பெயர்தமிழர் என அழைக்கப்படுவோரில் பலருக்கு தமிழே தெரியாது. ஜனாதிபதி
வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோருக்கும் தமிழே தெரியாது எனவும் இவர்கள் தம்மை இலங்கைத் தமிழர்கள் என்ற பதத்தை மறந்து புலம்பெயர் தமிழர் என அழைத்துகொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறைகூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கான தொலைக்காட்சி உரையில் அவர் மேலும் கூறுகையில், 'புலம் பெயர் தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றவர்களுக்குத் தமிழே தெரியாது. அவர்கள் தமிழில் ஒரு வார்த்தையும் கூடப் பேசத் தெரியாதவர்கள் மட்டுமல்ல, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊர்களின் பெயர்களைக் கூட சரியாக அறியாதவர்கள். ஆனால், புலம்பெயர் தமிழர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் எமது நாட்டுக்கு எதிரான தகவல்களைப் பரப்புவதில் முன்னிலை வகிக்கின்றனர். ஆயினும், அவர்களுக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட ஒழுங்காக பேச வராது.
அதேநேரத்தில், எமது நாட்டைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு சிலர் இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தது கூட இல்லை. இன்னும் சிலரோ இங்கு அடிக்கடி வந்து போகவும் செய்கின்றார்கள். அவர்களின் பெரும்பாலான உறவினர்கள் இங்குதான் நன்றாக வாழ்கின்றார்கள்.
ஆயினும், அவர்கள் அநியாயமான முறையில் எமது நாட்டைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்,' என்று ராஜபக்ஷ தனது உரையில் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
1 comments :
ஜனாதிபதி அவர்கள் புலம்பெயர் தமிழர்களை நன்றாகவே அறிந்துள்ளார்.
அவரின் கருத்துகளில் எவ்வித தவறும் இல்லை.
அவர்களுக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட ஒழுங்காக பேச வராது. அத்துடன் இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தது கூட இல்லை. இங்கு வந்து வாழப்போவதுமில்லை. அதற்குள் அவர்களுக்கு ஒரு தமிழீழம்.
Post a Comment