ஆழும் கட்சி உறுப்பினர்களே கட்சிக் எதிராக பிரச்சாராம் செய்கின்றனர். ஜனாதிபதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை தடுப்பதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த சில குழுக்களே முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக 10000 பேர் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், உண்மையில் 4000 பேருக்கு மட்டுமே சந்தர்ப்பம் அளிக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாத காரணத்தினால் அதிருப்தியடைந்தவர்கள் இவ்வாறு வேறும் கட்சிகளுக்கு ஆதரவளித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய கட்சி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்யும் உரிமை காணப்படுவதாகவும் இதனால் வேறும் கட்சி உறுப்பினர்களை தாக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தினால் பொருட்கள் சேவைகளுக்கான விலை உயர்வடைந்துள்ளதாகவும் இதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு நாட்டை தாரை வார்க்க முயற்சி மேற்கொண்டவர்கள் தற்போது அரசாங்கம் சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment