பிரபாகரனின் கராத்தே மாஸ்டருக்கு பேராதனையில் பதக்கம்.
வன்னியில் புலிகளின் காட்டாட்சி நடைபெற்றபோது, அங்கு தமிழீழ தேசிய கராத்தே சங்கங்களின் தலைவராக செயற்பட்டுவந்த ரட்ணசோதி என்பவர் அண்மையில் பேராதனியவில் 55 வயதுக்கு மேற்பட்ட கராத்தே வீரர்களுக்கான போட்டியில் 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
பிரபாகரனுடன் இணைந்து நின்று வன்னியிலுள்ள இளைஞர்களுக்கு கராத்தே எனும் தற்காப்பு புனித கலையை வன்செயலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என கற்றுக்கொடுத்த கராத்தே மாஸ்டர் தற்போது சர்வதேச ரீதியில் போட்டிகளில் ஈடுபட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு பிரபாகரனை கொன்றொழித்தமைக்காக நன்றியினை தெரிவித்துள்ளதாகவும், பிரபாகரன் இவ்வாறு அழித்தொழிக்கப்படாதிருந்தால் தான் தொடர்ந்து வன்னியில் முடங்கியிருந்து பயிற்சியளிக்க நேரிட்டிருக்கும் என தெரிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment