Saturday, March 5, 2011

சர்வதேச நீதிமன்றம் செல்ல நான் என்ன குற்றம் செய்தேன்?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்புயுள்ளார்.

அமெரிக்க செனற் சபையில் எம்மை யுத்தக் குற்ற நீதிமன்றிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளனர். நான் செய்த குற்றம் என்ன? விடுதலைப் புலி தீவிரவாதிகளை அழித்தது, பிளவுபடவிருந்த நாட்டை ஒன்றிணைத்து குற்றமா? என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த விடயங்கள் தெரூசூ3006;டர்பில் இவர்கள் இன்று பாரிய சத்தமிடுகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டதாம். யாருடைய மனித உரிமை மீறப்பட்டது? எங்களுடைய மனித உரிமை மீறப்பட்டுள்ளது. சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து சென்று புலிகளுடன் சேர்ந்து விமான நிலையத்திற்குள் என்னால் செல்ல முடியாது போனது. இப்படி சிலர் இன்று முயற்சிக்கின்றனர். என்று ஜனாதிபதி கூறினார்.

அரசை கவிழ்க்கும் தேர்தலாக இதனை மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அரசை கவிழ்க்க வேண்டுமாயின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் வரும்வரை காத்திருங்கள் என எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதுவரையில் இப்போது இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து கிராமத்தைக் கட்டியெழுப்புங்கள். இன்று இந்த நாட்டு மக்களுக்கு சுதந்திரம் உண்டு அங்கும் இங்கும் செல்ல முடியும். அனைத்து சுதந்திரத்தையும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ஆனால் அதனைக் கட்டு பொறாமைப்படும் நபர்களும் உள்ளனர். என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com