தேர்தலுக்கு அரச சொத்துக்களை பயன்படுத்தாதீர். தேர்தல்கள் ஆணையாளர்.
உள்ளுராட்சி சபை தேர்தலில் அரசசொத்துக்களை பயன்படுத்த வேண்டாமென தேர்தல்கள் ஆணையாளரால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்று நிருபம் முலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன். முக்கிய தேவை நிமிர்த்தம் முக்கிய அதிகாரிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வாடகைக்கு அமர்த்தப்படும் சொத்துக்களுக்கான அறிவுறுத்தல் பற்றியும் குறிப்பிடபட்டுள்ளது.
அதேநேரம் எதிர்காலத்தில் எந்தவொரு அரச பதவிகளையும் தற்போதுள்ள அரசின் கீழோ எதிர்கால அரசின் கீழோ பெற்றுக் கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றின் போது அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் ஒரு சில சிறந்த அரசியல்வாதிகளே உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இலங்கை வாக்காளர்கள் வளர்ச்சி பெற்றவர்கள் எனவும் ஒரு சில அரசியல் வாதிகள் வளர்ச்சியற்றவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment