நோர்வேயில் புலிகளுக்கு சொந்தமான கட்டிடம் பொலிஸாரின் முற்றுகைக்கு உள்ளானது.
புலிகளமைப்புக்கு சொந்தமான கட்டிடமொன்று (Nedre Rommen 3 , 0988 OSLO,Norway ) நோர்வே பொலிஸாரினால் நேற்றுக்காலை 10 மணியளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளரும் ஆயுதக்கடத்தல் மன்னனுமான கே.பி யின் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததாக கூறப்படும் இக்கட்டிடம் தற்போது நெடியவன் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ளது. புலிகளின் முன்னணி அமைப்புகள் பலவும் தமது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இக்கட்டித்தின தளமாக பயன்படுத்தி வருவதுடன் அங்கு பாடசாலை ஒன்றும் நாடாத்தப்படுகின்றது.
புலிகளின் பணம் சொத்துக்கள் யாவும் தனியார் பைகளினுள் செல்லும் நிலையில் இக்கட்டிடத்திற்கும் இதேநிலை ஏற்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கட்டிடம் சோதனையிடப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவராத போதும், சோதனையிடவந்திருந்த பொலிஸார் அக்கட்டிடத்திலிருந்து செயற்படுகின்ற புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது.
நோர்வே புலிகள் குறிப்பிட்ட கட்டிடத்தை வங்கியில் அடவு வைத்து 30 மில்லியன் குரோணர்களை கடனாக பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ளனர். இப்பணம் என்னதேவைக்காக பயன்படப்போகின்றது என்ற கோணத்தில் புலன்விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டே இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
ஆதேநேரம் பொதுமக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடத்தை வங்கியில் அடவு வைத்து பணம் எடுப்பதற்கான தேவை என்ன எனவும்? அப்பணத்தை யார் திரும்பி செலுத்துவது எனவும் புலிகளிடம் மக்கள் கேட்டபோது, பணத்தினை கொண்டு இலங்கையில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாக புலிகள் தரப்பினர் பதிலளித்துள்ளதாக நோர்வே செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
1 comments :
ஆகா நல்ல திட்டம். மக்களிடம் காசும் வாங்கமுடியாது, சொத்துக்களை விற்கவும் முடியாத நிலையில், வங்கியில் அடகுவைத்து விட்டு மில்லியன்களை பகிர்த்து எடுத்துக்கொண்டு கம்பி நீட்டி விடலாம். சுலபமாக வருகிற காசை எவன் தான் விடப்போறான்?
இப்படி எத்தையோ புலிப்பினாமிகள் உலகில் மில்லியனர்களாக வந்துவிட்டார்கள்.
அன்றும் இன்றும் ஏமாறுவது அப்பாவி தமிழ் மக்களே.
Post a Comment