தற்கொலைச் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர்.
வன்னியில் யுத்தம் உக்கிரமடைந்து கொண்டிருந்தபோது பயங்கரவாத தலைமையினை தக்கவைக்கும் நோக்கில் புலம்பெயர் புலிச் செயற்பாட்டாளர்கள் பலரை தற்கொலை புரிய தூண்டியிருந்தனர் இப்பேர்வழிகள் தூண்டுதலின்பேரில் பலர் தம் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
13 மாசி 2009ம் புலிகளின் தமிழர் ஒருங்கினைப்பு குழுவினரின் ஏற்பாட்டில் ஜெனிவா ஜ.நா முன்றலில் முருகதாசன் என்ற புலிச் செயற்பாட்டாளன் தற்கொலை செய்தார். 08 மாசி 2009 றாஜா என்ற தமிழ் இளைஞன் மலேசியாவில் வெடித்து சிதறினார். 14ம் திகதி மாசி மாதம் பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு முன்பாக ஒருவர் வெடித்து சாக முற்பட்டபோது பிரித்தானிய பொலிசார் கைது செய்தனர். மாசி மாதம் 07ம் திகதி 2009 இந்தியாவில் றவிசந்திரன் என்பவர் உட்பட பல திகதிகளில் 5 பேர் எரிந்து தற்கொலை செய்தனர். 01 திகதி மாசி முருகதாசு என்ற இழைஞன் தீயில் எரிந்தார்.
இதன் தொடர்சியாக நோர்வேயில் இவ்வாறானதோர் தற்கொலை இடம்பெறவிருந்தாகவும், இதற்காக புலிச் செயற்பாட்டாளர்கள் சிலரால் புலிகளின் தீவிர ஆதரவாளரும் புலிகள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஊர்வலங்கள் பலவற்றில் முன்னணியில் பங்கெடுத்தவருமான பெண்ணொருவர் மூளைச் சலவை செய்யப்பட்டு இத்தற்கொலை நாடகத்தை அரங்கேற்றவிருந்துள்ளமை தற்போது சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பெண் புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலரால் மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொள்ளவிருந்தமையும் அதற்காக தீட்டப்பட்ட திட்டங்களும் தற்போது மூன்றாம் தரப்பு ஒன்றிடம் சிக்கியுள்ளதுடன், அவர்கள் அவற்றை சட்டத்துறையினரிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதும், தற்கொலைக்கு தூண்டுவதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். இதேநேரம் இச்சம்பவத்தினை அறிந்துள்ள நோர்வே புலிகள் குறிப்பிட்ட பெண்னை தாங்கள் தூண்டவில்லை எனவும் அவர் அதை சுயமாகவே செய்துகொள்ளவிருந்தார் எனவும் சகல குற்றங்களையும் பெண்ணின்மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
1 comments :
அன்றும் இன்றும் ஏமாறுவது அப்பாவி தமிழ் மக்களே.
Post a Comment