கோரளைப்பற்று மேற்கு ஐ.ம.சு.க வசம். த.ம.வி.பு மற்றும் தமிழரசுக்கட்சி படுதோல்வி
மட்டக்களப்பு - கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 8816 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 1581 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை தானதாக்கிக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 966 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றிக் கொண்டுள்ளது.
இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 491 வாக்குகளையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 329 வாக்குகளையும் பெற்றுள்ளதுடன், எவ்வித ஆசனங்களையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment