வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர்
பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தையில் புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்றுவந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புனர்வாழ்வு பெற்றுவரும் இளைஞர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து இவர் நித்திரையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டதாக படை வட்டாரங்கள் தெரிவித்தன.
கிளிநொச்சியை சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26வயது)என்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கந்தை பிரதேசத்தில் உள்ள திருகோணமடு பகுதியில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த விடுதலைப்புலி உறுப்பினரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சடலம் பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலநறுவை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments :
Post a Comment