தமிழ் மக்கள் விடுதலைப் புளிகள் வெற்றிக்களிப்பில்.
கிழக்கு மாகாணத்தில் 05 மன்றுகளுக்காக போட்டி போட்டு எந்தவொரு மன்றையோ அன்றில் எதிர்கட்சியையோ கைப்பற்ற முடியாது என்ற தமது பலத்தை நிரூபித்துக்காட்டியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புளிகள் தாம் 5 மன்றுகளில் போட்டியிட்டு 03 மூன்று மன்றுகளில் தலா ஒவ்வொரு உறுப்பினரை பெற்றுக்கொண்டதை பெருவெற்றியாகவும் வெற்றிக்கான படியாகவும் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் உள்ளார். புலிகளிலிருந்து பிரிந்துவந்துள்ள மேற்படி புளிகள், புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவ மோகத்திலிருந்து சற்றும் விடுபடாமல் கிழக்கு மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புளிகளே என ஆங்காங்கே கூறிக்கொள்ளும் நிலையில் 5 மன்றுகளுக்கு போட்டியிட்டு 03 உறுப்பினர்களைப் பெற்றுள்ளமை தமது கட்சியின் வெற்றிக்கான முதற்படி என தெரிவித்துள்ளமை கடந்த மாகாண சபைத் தேர்தலில் த.ம.வி.புளிகள் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் வெற்றியானது ஆயுதங்களால் பெற்றுக்கொண்ட வெற்றியே என்பதை ஒத்துக்கொண்டுள்ளதாக அரசியல் நோக்குனர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இத்தேர்தலில் தமக்கு 3 உறுப்பினர்கள் கிடைத்தமை பெருவெற்றியே என அக்கட்சி தெரிவித்துள்ளமையை நோக்கும்போது அவர்கள் தமக்கு எவ்வித ஆசனங்களும் கிடைக்கப்போவதில்லை என்ற எதிர்பார்பிலேயே இருந்துள்ளனர் எனவும் நோக்குனர்கள் கருதுகின்றனர்.
பிள்ளையான் இவ்வாசனத்தில் அமர்வதற்கான வழியைக்காட்டிய கருணா எனப்படும் முரளிதரனையே விமர்சித்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக தொடரும் பிள்ளையான் இதுவரை முதலமைச்சராக இருந்து செய்த சேவைக்காக முக்கி பெற்ற கதிரைகள் 03 மட்டமே என பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
0 comments :
Post a Comment