சோதனைச்சாவடியில் துப்பாக்கிச் சூடு. இராணுவம் பலி : சாவடி நிர்மூலம்.
அஹங்கம - திக்கும்பர பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறிப்பிட்ட பொலிஸ்சாவடியூடாக 3 தடவைகளுக்கு மேலாக மோட்டார் வண்டியில் பயணம்செய்த இளைஞர்கள் மீது சந்தேகம்கொண்ட பொலிஸார் வண்டியை நிறுத்துமாறு கட்டளையிட்டபோதும் அவர்கள் வண்டியை நிறுத்தாது சென்றபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தில் மோட்டார் வண்டியில் பயணம்செய்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் இராணுவ வீரர் என தெரியவருகின்றது.
சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த பொதுமக்கள் குறிப்பிட்ட சோதனைச்சாவடியை நிர்மூலம் செய்துள்ளதுடன் அங்கிருந்த பொலிஸ் கப் வண்டி ஒன்றுக்கு தீமூட்டியுள்ளனர்.
குறிப்பிட்ட சோதனைச் சாவடியில் 3 பொலிஸாரும் 1 இராணுவத்தினனும் கடமையில் இருந்துள்ளதுடன் இராணுவத்தினனின் துப்பாக்கிச்சூட்டிலேயே இருவரும் உயிரிழந்தாக தெரியவருகின்றது. முதற்கட்ட விசாரணைகளின்போது பொலிஸாரின் கட்டளையின்பேரிலேயே தான் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவீரர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினரின் கட்டளையை மீறி சென்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவர்கள் காயமுற்று வீழ்ந்து கிடந்தபோது அவர்களை வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்வதற்கு பொதுமக்கள் முனைந்தபோதும் கடமையிலிருந்தோர் அதற்கு மறுப்பு தெரிவித்தமையினாலேயே மரணம் ஏற்பட்டதாக ஆத்திமுற்ற பொதுமக்களே வன்செயலில் இறங்கியதாக பிரதேசவாசி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment