Saturday, March 12, 2011

கடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறப்பானவை. லண்டன் இளைஞன்.

லண்டனிலிருந்து இலங்கை சென்றபோது ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக 3 மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது லண்டன் திரும்பியுள்ள சுந்தர் என அறியப்படும் குறிப்பிட்ட நபரிடம் செய்தி தொடர்பாக வினவியபோது தான் கடத்தப்பட்டிருக்கவில்லை எனவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யபப்பட்டதாகவும் கூறுகின்றார்.

இது தொடர்பாக சுந்தர் இலங்கைநெற் இற்கு தெரிவித்த கருத்துக்கள் இங்கு ஒலிவடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் லங்காசிறி மற்றும் தமிழ்வின் இணையங்கள் இச்சம்பவம் தொடர்பாக பல திரிபுபடுத்திய செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அவ்விணையத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்ட சுந்தர் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள் நான் இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பும் உண்மைகள் வெளியிடுங்கள் என கோரியபோது அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com