Monday, March 14, 2011

பூமி அதிர்வை முன்கூட்டியே பதிவு செய்ய இலங்கையில் உபகரணம் அமைக்கப்படுமாம்.

பூமி அதிர்வை முன்கூட்டியே பதிவுசெய்யும் உபகரணங்கள் இரண்டை இலங்கையில் பொருத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது. வடமத்திய மாகாணத்தில் உள்ள மகாந்திரவல மற்றும் தென்மாகாணத்திலுள்ள கக்வன ஆகிய இடம்களிலே இந்த புதிய உபகரணங்கள் பொருத்தப்படவுள்ளன.

புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள இந்த இரண்டு உபகரணங்களும் தலமையகத்துடன் நேரடிதொடர்பினை கொண்டிருக்கும் என புவிசரிதவியல் திணைக்களத்தின் தலைவர் ஷேனு விஜயானந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல்லேகல உட்பட மேலும் 3 இடம்களில் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே பதிவுசெய்யும் நிலையங்கள் செயற்படுவதாகவும் இந்நிலையங்கள் ஊடாக இயற்கை அனர்த்தம் பற்றி இலங்கை மக்கள் சிறந்த நிலையில் அறியகூடியதாக உள்ளதாகவும் ஜப்பானில் இடம்பெற்ற பூமி அதிர்வை பதினெரு நிமிடங்களில் அறியமுடிந்தது எனவும் இலங்கையை அண்டிய பிரதேசங்களில் ஏற்படும்; அனர்த்தங்களை ஒருசில நிமிடங்களில் அறிந்து இயன்ற அளவிளான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவத்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com