Saturday, March 19, 2011

பஹ்ரையினில் மக்கள் புரட்சியின் விளைவு எதிர்கட்சியினர் அறுவர் கைது.

பக்ரைனில் மன்னர் ஹமாத் பின் இஷா அல் கலிபாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பான கலவரத்தில் 3 போலீசார் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். பள்ளிகள், அலுவலகங்கள், வங்கிகள் கடந்த இரண்டு நாட்களாக மூடபட்டிருந்தன. பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் முக்கிய எதிர்க்கட்சியான ஹக் அமைப்பின் தலைவர் ஹசன் முஷைமாவும் ஒருவர். தானாக நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வந்த இவர் கடந்த மாதம் நாடு திரும்பினார். வபா கட்சியின் அப்தெல் வஹாப் உசைன் மற்றும் சன்னி பிரிவு தலைவர் இப்ராகிம் ஷரிப் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களின் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நிலையில், அமைதியை ஏற்படுத்த எதிர்க்கட்சியினருடன் மன்னர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதேநேரம் பஹரையினிலுள்ள இலங்கையர்களின் தேவைகளை குறித்து ஆராய்வதற்கும் அவர்களை இலங்கைக்கு அழைத்துவரவேண்டிய நிலைமை ஒன்று உருவாகின் அதற்கான நடடிவக்கைகளை மேற்கொள்ளவும் விசேட குழுவொன்று பஹ்ரையினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்:

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com