கிழக்கில் உள்ளூராட்ச்சி வேட்பாளரின் இணையத்தளம்.
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட சில பிரதேசங்களில் மட்டுமே இடம்பெறும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம்கள் வாழும் பிரதேசங்களாக காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் மட்டுமே தற்போது தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் காத்தான்குடி நகர சபைக்கா போட்டியிடும் நான்கு அரசியல் கட்சிகள் மற்றும் பதிநான்கு சுயேற்சைக்குழுக்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 06 இலக்கத்தில் போட்டியிடும் அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஜெஸீம் ஜே.பி அவர்கள் தனது இணையத்தளத்தினை இன்று ஆரம்பித்துள்ளார். இவ்விணையத்தளமானது தனது பிரதேசத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கு தனது ஆதரவாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபைக்கான 09 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக 192 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இவர்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புப் சார்பாகப் போட்டியிடும் அல்ஹாஜ் ஜெஸீம் ஜேபி அவர்கள் அரசியலுக்கு புதியவராயினும் அவருக்கே அதிகமான மக்கள் ஆதரவளித்துவருகின்றார்கள் என்பதுடன் அதிகளவான விருப்பு வாக்குகளைப் பெற்று இவரே நகர சபை முதல்வராக தெரிவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விணையத்தளம் அன்னாரின் பிரச்சாரக்கூட்டங்களை நேரடியாக உலக மக்கள் அறியும் வண்ணம் வழங்கவுள்ளதாகவும் அதன் நிர்வாகிகள் எமக்குத் தெரிவித்தனர். இந்த இணையத்தளத்தினை www.jaseem.tk என்ற முகவரியில் பார்வையிடலாம்.
0 comments :
Post a Comment