Sunday, March 13, 2011

லிபியாவில் அல் ஜசீரா டி வி. நிருபர் சுட்டுக் கொலை!

லிபியாவின் செய்திகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதில் முதன்மை நிறுவனமாக இருந்து வரும் அல்ஜசீரா தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். கடாபிக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வரும் லிபியாவில் ஒரு பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இந்த சம்பவத்தினால் நாங்கள் துவண்டு விட மாட்டோம் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதி முன் நிறுத்துவோம் என்றும் இந்த டி.வி., நிறுவன இயக்குனர் ஜெனரலர் வாடா கான்பார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடாபிக்கு எதிராக எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடாபி நாட்டை விட்டு தப்பி ஓடி விடுவார் என்ற செய்தி மட்டும் பரவி வருகிறதேயொழிய அவர் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவும், காப்பாற்றவும் தொடர்ந்து உழைப்பேன் என்றார். மக்கள் என்மீது பாசமுள்ளவர்கள் அவர்களை போதைக்கு அடிமைப்படுத்தி தமக்கு எதிராக திசை மாற்றப்பட்டுள்ளனர் என்றார் கடாபி.

இதற்கிடையில் இங்கு நடக்கும் போராட்டம், கடாபியின் படை பல தாக்குதல்களை முழு அளவில் கவரேஜ் செய்து வருகிறது அல் ஜசீரா டி.வி., நிறுவனம். மற்றும் உள்ளூரில் உள்ள அல்ஜசீரா அராபிக் சேனலையும் இப்பகுதி மக்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். இந்த நிறுவன லிபியாவின் காமிராமேன் அலிஹசன் அல் ஜாபர் செய்திகளை வழங்கி விட்டு திரும்பும் போது சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தை செய்தியாக வழங்கி விட்டு லிபியாவின் கிழக்கு பகுதியான பெங்காஷிக்கு காரில் திரும்பி கொண்டிருக்கும் நேரத்தில் காரை நோக்கி மர்ம நபர்கள் சுட்டனர். இதில் 3 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கொலைக்கு அல்ஜசீரா நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது போன்ற கோழைத்தனமான மிரட்டலுக்கு அஞ்சாமல் எங்கள் பணி தொடர்ந்து நடக்கும் என்றும் குற்றவாளிகள் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கொலையில் கடாபியின் தலையீடு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

கத்தார் நாட்டை சேர்ந்தவர்: கத்தார் நாட்டை சேர்ந்த அல்ஜாபர் (வயது 55). கெய்ராவில் சினிமா போட்டோகிராபியில் பட்டம் பெற்றவர். கத்தாரில் உள்ள சி.என்.பி.சி., அரேபிய தொலைக்காட்சியில் இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் பத்திரிகையாளர் எங்கே ? : பிரேசில் நாட்டு செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஆன்டிநேட்டோ என்பவரை கடாபி அரசு கைது செய்து வைத்திருந்து 10 நாட்களுக்கு பின்னர் விடுதலை செய்ததது. ஆனால் இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com